‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆல்யா மானசா குத்து டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.

காதல் திருமணம்
ராஜா ராணி தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரியவந்தது.
குழந்தையை கொஞ்சும் ஆல்யா
இதனையடுத்து சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா. அவர் எப்பொழுது தன் செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்டாலும், முகம் தெரிவது இல்லை என்பதுதான் ரசிகர்களின் வருத்தம். குட்டிப் பாப்பாவின் முகம் தெரியும் வகையில் புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ் கார்த்திக்கிற்கு அன்பு கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு பிறகு குழந்தையின் முகம் தெரிவது போல நிறைய புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டார் ஆலியா மானசா. அதனைப் பார்த்த ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். அதில் குட்டி சஞ்சீவ், குட்டி ஆல்யா, குட்டிபப்பு என்றும் கூறி வந்ததோடு, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தும் வந்தனர்.
குத்து டான்ஸ்
அந்த வரிசையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆல்யா மானசா, மரண குத்து டான்ஸ் ஆடியுள்ளார். ஆல்யாவின் நடனத்தைப் பார்த்து உற்சாகமடைந்த அவரது ரசிகர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.















































