கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சினிமாவில் சாதிக்க விருப்பம்

பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சினிமாவில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டு தான் இருக்கின்றது. மருத்துவம், பொறியியல் படித்தவர்கள் மட்டுமல்லாமல் விளையாட்டு துறையில் இருப்பவர்களுக்கும் நடிக்க வேண்டுமென்ற ஆசை இருப்பது தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பல அழகிகள் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து உள்ளனர். அந்த வரிசையில் தற்போது இறங்கி இருப்பவர் தான் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு, தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆரம்பமே அசத்தல் என்று சொல்லுமளவிற்கு முதல் படத்திலேயே ஹர்பஜன்சிங் உடன் இணைந்து நடித்துள்ளார் லாஸ்லியா. கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல், நடிகர் ஆரி நடிக்கும் படத்திலும் லாஸ்லியாவுவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ் போற்றோர் நடிக்கும் ‘பிரஸ்ட்ஷிப்’ படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஹர்பஜன் சிங் ஏதோ ஒரு முக்கிய விஷயத்திற்காக போராடும் விதமாகவும், அர்ஜுன் அதை தடுக்கும் விதமாகவும் டீசரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. லாஸ்லியா சில நேரங்களில் சிரிப்பதும், அழுவதும் மட்டுமே செய்கிறார். ‘பிரண்ட்ஷிப்’ டீசரைப் பார்த்த ரசிகர்கள், ஹர்பஜன்சிங் நடிப்பில் வெளுத்து வாங்கியிருப்பதாக கூறி வருகின்றனர். கிரிக்கெட் மட்டும் அல்லாமல் நடிப்பின் மூலம் சினிமாவிலும் தன் திறமையை காட்டுவார் என்று ஹர்பஜன்சிங் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அர்ஜூன், ஹர்பஜன் சிங், சதீஷ் என இந்தக் கூட்டணி அழகாகவும், எதார்த்தமாகவும் அமைந்திருப்பதனால் இப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கதாநாயகனாக களம் இறங்கி இருக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பது இப்படம் வெளிவந்த பிறகு தான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here