தன்னுடைய அப்பா தனக்கு லிஜென்ட் என்றும் அவரைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்றும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் காட்டமுடன் கூறியுள்ளார்.

நெட்டிசன்ஸ் கிண்டல்

1998 ஆம் ஆண்டு ‘வேட்டிய மடிச்சு கட்டு’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சாந்தனு. இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகனான இவர், 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சக்கரக்கட்டி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதைத்தொடர்ந்து ‘ஆயிரம் விளக்கு’, ‘கண்டேன்’, ‘அம்மாவின் கைப்பேசி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ் குறும்படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தனக்கு பிடித்தமான கதைக்களம் அதில் அமைந்திருப்பதாக அவரே கூறியுள்ளார். ஆனால் நெட்டிசன்கள் சாந்தனுவை கேலியும், கிண்டலும் செய்துள்ளனர்.

கடுப்பான சாந்தனு

தற்போது சுதா கொங்கரா இயக்கும் குறும்படத்தில் சாந்தனு நடித்து வருகிறார். அதில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி, நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். சாந்தனு சிறிது நாட்களுக்கு முன்பு அவருடைய டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். தன்னுடைய அப்பா தனக்கு லிஜென்ட் என்றும் அவரைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது என்றும் குறிப்பிட்டிருதார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள், என்னவென்றே தெரியாமல் தலைச்சுற்றி போயினர். ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில், சாந்தனு அப்படி ஒரு டுவீட்டை போட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. அவருக்கு குறும்படத்தில் மட்டும்தான் நடிக்க வரும், வெள்ளித்திரையில் நடிக்க வராது என்றும் ஒரு தரப்பினர் கிண்டல் செய்துள்ளனர். இதனாலேயே சாந்தனு பாக்யராஜ் கடுப்பாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here