சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகன் மரண வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

தந்தை, மகன் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி கடை வந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி அதிகநேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தந்தை, மகனான இருவரையும் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சிபிஐ ஒப்புதல்

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. சாத்தான்குளம் வழக்கை சிபிஐ ஏற்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here