திருச்சி அருகே 14 வயது சிறுமி எரித்துக் கொல்லபட்ட சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

சிறுமி மரணம்

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத்தூர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயியான இவரது 14 வயது மகள் எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், வீட்டின் அருகே தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அச்சிறுமி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அங்குள்ள முள்காடு பகுதியில் சிறுமி, உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் காவல்தூறை உயர் அதிகாரிகள் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

தாமாக முன்வந்து விசாரணை

இதனிடையே, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடலை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்று பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறுமி மரணமடைந்த சம்பவம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்வது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here