பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் குண்டான தோற்றத்துடன் காணப்பட்ட நடிகை ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார்.
பிக்பாஸ் பிரபலம்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். அதன்பிறகு சில படங்களில் மட்டுமே நடித்த அவருக்கு, போதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால், சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். கடைசியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நண்பேன்டா’ படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்த ஷெரின், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த போது நடிகை ஷெரின் மிகவும் குண்டாக இருப்பதாக பலர் விமர்சித்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதனையடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தவாரே சில நாட்களிலேயே அவர் தனது உடல் எடையை குறைக்க துவங்கினார்.
மகிழ்ச்சியாக இருக்கிறேன்
பிக்பாஸ் வீட்டில் பல நாட்கள் கழித்த பிறகு, “எப்படி இருந்த ஷெரின் இப்படி ஆயிட்டாரே” என்று மறுபடியும் பழைய புகைப்படத்தை வைத்து ட்ரோல் செய்ய தொடங்கிவிட்டனர் நெட்டிசன்ஸ். ஆனால் உடல் எடையை தாறுமாறாக குறைத்து உள்ளார் நடிகை ஷெரின். அந்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி போயினர். இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ள ஷெரின், முன்பைவிட தற்போது 10 கிலோ எடையை குறைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்; நான் அப்போது இருந்த போதும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். தற்போதும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எடை குறைப்பது மிகவும் சுலபம் தான். ஆனால், புண்படுத்தும் வகையில் கூறிய மோசமான வார்த்தைகளை யாராலும் திரும்பப்பெற முடியாது. ஒருவர் சிரிப்பதற்கும் அல்லது யாரோ ஒருவரது கவலைக்கும் நீங்கள் காரணமாக இருக்கலாம். ஆனால், நல்ல விஷயத்தை செய்யுங்கள் என கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மீண்டும் வாய்ப்பு?
பிக்பாஸ் டைட்டிலை ஷெரின் வெல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தர்ஷன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதில் மூன்றாம் இடத்தை பிடித்தார் ஷெரின். அதன்பிறகு ஷெரினுக்கு சில பட வாய்ப்புகளும், சினிமா நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்புகளும் வந்ததாக கூறப்படுகிறது. இந்த லாக்டவுன் காலத்துக்கு பிறகு ஷெரின் நடிக்கும் படத்தின் அறிவிப்புகள் ஏதாவது வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.