விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான க/பெ. ரணசிங்கம் திரைப்படம் OTTயில் ரிலீஸாக உள்ளதாக வெளியான தகவலை அப்படத்தின் இயக்குனர் விருமாண்டி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தியேட்டர்கள் திறப்பு எப்போது?
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. தமிழக அரசு அனுமதியளித்த பிறகு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், அதிக ரசிகர்கள் படம் பார்க்க வருவார்களா என்பது கேள்விக்குறியே. இதனால் புதிய படங்கள் OTT தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
OTTயில் புதிய படங்கள்
ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT தளத்தில் வெளியானது. அதனைதொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் வருகிற 19-ந் தேதி OTT தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் அமிதாப்பச்சனின் குலாபோ சிடோபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, கன்னடத்தில் உருவான பிரெஞ்சு பிரியாணி, மலையாளத்தில் தயாரான சூவியும் சுஜாதாவும் ஆகிய படங்கள் OTT தளத்தில் வெளியாக உள்ளது.
இயக்குனர் விளக்கம்
அந்த வரிசையில், விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான க/பெ. ரணசிங்கம் படமும் OTT தளத்தில் வெளியிட முயற்சிகள் நடப்பதாகவும், இதுதொடர்பாக ஓடிடி தளங்கள் படக்குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள படத்தின் இயக்குனர் விருமாண்டி, க/பெ. ரணசிங்கம் திரைப்படம் தியேட்டரில் வெளியான பின்பே OTTயில் வெளியாகும் என விளக்கமளித்துள்ளார். படத்தின் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்த பின், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.