ரசிகர்களால் ‘நிலா’ என்று அறியப்படும் நடிகை மீரா சோப்ரா வரும் 12 ஆம் தேதி தனது காதலரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

நிலா

தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பே ஆருயிரே’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. அவர் ‘நிலா’ என்று ரசிகர்களால் பரவலாக அறியப்படுகிறார். பின்னர் மருதலை, ஜாம்பவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். அதைதொடர்ந்து இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம்

தற்போது 40 வயதாகும் நடிகை மீரா சோப்ரா, கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலர் ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். வருகிற 12 ஆம் தேதி இந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. பாரம்பரிய முறையில், அதே சமயம் பல்வேறு கொண்டாட்டங்கள் நிறைந்த விழாவாக இந்த திருமண விழாவை நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here