நேயர்களின் அபிமான நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர் சிங்கர் இசை ரியாலிட்டி ஷோவின் புத்தம் புதிய சீசன் வெற்றிகரமாக தொடங்க உள்ளது.

ஜொலிக்கும் நட்சத்திரங்கள்

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றிநடை போட்டு வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை  ஏற்படுத்தி வரும் இந்த நிகழ்ச்சி, தற்போது புத்தம் புதிய சீசனை தொடங்க உள்ளது. 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடையே எப்போதுமே சிறந்ததாகவே இருந்து வருகிறது. பல வெற்றிகரமான சீசன்களுக்குப் பிறகு, இந்த பிரம்மாண்ட மேடையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இளம் பாடும் திறமைவாய்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் இந்த மேடையில் பாடும் வாய்ப்பை விஜய் டிவி வழங்கி வருகிறது. போட்டியாளர்களாக பங்கேற்றவர்களுக்கு உரிய அங்கீகாரமும், பிரபல அந்தஸ்தையும் இந்த நிகழ்ச்சி வழங்கியுள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்ட சூப்பர் சிங்கர் திறமைகள் திரையுலகில் முன்னணி பின்னணிப் பாடகர்களாகவும், உலகெங்கிலும் உள்ள பல நிகழ்வுகளிலும் பங்கேற்று நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

வெற்றியாளர்கள்

சூப்பர் சிங்கர் முதல் சீசனில் கிருஷ்ணமூர்த்தி முதல் பட்டத்தை வென்றார், அடுத்தடுத்த சீசன்களில் அல்கா அஜித், ஸ்பூர்த்தி, பிரித்திகா, ஹிருத்திக், கிரிஷாங் மற்றும் ஸ்ரீனிஷா ஆகியோர் ஜூனியர்களுக்கான சமீபத்திய சீசனில் முறையே டைட்டில் வெற்றியாளர்களாக முடிசூட்டப்பட்டனர். பிரபல இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா, டி.இமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ரவிச்சந்திரன், ஏ.ஆர். ரகுமான் மற்றும் தமன் ஆகியோரின் இசையமைப்பில் பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியை பாடகி சின்மயி, நடிகர் சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷினி, திவ்யா, பாவனா மற்றும் பல பிரபலங்கள் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாடகர்கள் மனோ, மால்குடி சுபா, உஷா உதுப் மற்றும் பலர் முந்தைய சீசன்களில் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

சீசன் 10

இந்த பாடும் திறமைக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சி டிச.,16 முதல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தேர்வில் திறமைசாலிகள் பங்கேற்று பல நிலைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சூப்பர் சிங்கர் சீசன் 10ல் புகழ்பெற்ற பின்னணி பாடகர்களான மனோ, சுஜாதா, அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுவர். ம கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். இந்த புதிய சீசனில், நிகழ்ச்சியின் மிக பிரமாண்டமான மேடையில், சிறந்த பாடும் திறமையாளர்கள் அனைவரும் ஜொலிக்க  உள்ளனர். மேலும் 16 டிசம்பர் 2023 முதல், சனி மற்றும் ஞாயிறுதோறும் மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீசன் 10 கண்டு மகிழுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here