கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனது. இப்பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது சமீபத்தில் சில குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அது தமிழ் திரைத்துறையில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர்கள் சமுத்திரகனி, சசிக்குமார், கரு.பழனியப்பன், பொன் வண்ணன், பாரதி ராஜா ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீருக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்றைக்குமே “அமீர் அண்ணா” என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here