கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோவை நடிகர் ரஜினிகாந்த் நாளை (நவ.,3) வெளியிடுகிறார்.

பல போராட்டங்கள்

1996 ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2 இயக்கும் பணியை தொடங்கிய ஷங்கருக்கு பல பிரச்சனைகள் வந்தது. பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தை முடிக்கும் வேலையில் விறுவிறுப்பாக இறங்கியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இந்தியன் 2 படத்தில் ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சின்கா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

அறிமுக வீடியோ

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் அறிமுக வீடியோ நாளை (நவ.,3) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் வெர்ஷனை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுகிறார். இந்தி வெர்ஷனை நடிகர் ஆமீர்கானும், தெலுங்கு வெர்ஷனை இயக்குநர் ராஜமவுலியும், கன்னட வெர்ஷனை கிச்சா சுதீப் வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here