வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு பபடத்தின் மூலம் கம்பேக் கொடுத்த நடிகர் சிம்பு, அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் நடித்திருந்தார். தற்போது தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். STR 48 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. பத்து தல ஷூட்டிங் முடிந்ததும் தாய்லாந்து சென்ற சிம்பு, STR 48 படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் ட்ரெய்னிங் எடுத்தார். அதன்பின்னர் லண்டன் சென்ற அவர், அங்கும் STR 48 படத்திற்காக தனது லுக்கை மாற்றும் வேலைகளில் பிஸியாகிவிட்டார். பத்து தல படத்திற்காக நல்ல வெயிட் போட்டு கேங்ஸ்டர் லுக்கில் இருந்த சிம்பு, இப்போது மீண்டும் உடல் எடையை குறைத்து செம்ம ஸ்மார்ட்டாக திரும்பியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் சிம்புவின் ஸ்டைலிஷான லுக்கும் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here