விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் கடந்த ஒரு வார கால வசூல் குறித்த தகவலை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வரவேற்பு

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ‘லியோ’. இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாதனை

இந்த நிலையில், ‘லியோ’ திரைப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியாகிய ஏழு நாட்களில் ரூ.461 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here