கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜப்பான்’ படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

25வது படம்

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘ஜப்பான்’. கார்த்தியின் 25வது படமான ‘ஜப்பான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. 

டிரெண்டிங்

இந்த நிலையில் ‘ஜப்பான்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் ‘ஜப்பான் ரேஞ்ஜே வேற’ போன்ற காமெடி வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here