ஜப்பானின் ஷிசிடோ நிறுவனத்தின் முதல் இந்திய தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முத்திரை பதித்த நடிகை

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான நடிகை தமன்னா, வியாபாரி, கல்லூரி, அயன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் இவர் நடித்த கல்லூரி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் பெற்றது. அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். படிக்காதவன், பையா, சுறா போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்திருக்கிறார்.

சூப்பர் டூப்பர் ஹிட்

‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ பாடல் மூலமாக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்தார் நடிகை தமன்னா. அனிருத் இசையில் உருவான அந்தப் பாடலில் நடிகை தமன்னா கிளாமரான குத்தாட்டம் போட்டது பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. சமூக வலைதளங்கள் அனைத்திலும் ‘காவாலா’ பாடல் டிரெண்டிங்கில் கலக்கியது. இதனையடுத்து ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 போன்ற வெப் தொடர்களிலும் நடித்து பரபரப்பை கிளப்பி இருந்தார் தமன்னா. 

பெருமை

கடந்த சில மாதங்களாகவே இந்திய சினிமாவை கலக்கி வரும் நடிகை தமன்னாவுக்கு புதிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது. ஜப்பானின் புகழ்பெற்ற அழகு சாதன நிறுவனமான ஷிசிடோவின் இந்திய தூதராக தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தமன்னாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here