அஜித் குமார் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசான்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஸி நடிகை

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ரா. பின்னர் ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரெஜினா, தமிழில் எதிர்பார்த்த அளவு ஹிட் கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பேச்சுவார்த்தை

இந்த நிலையில், அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரெஜினா கசான்ராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here