புதிய தோற்றத்துடன் இருக்கும் நடிகை எமி ஜாக்சன்புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

துரையம்மாள்

ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை எமி ஜாக்சன், தற்போது ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். மதராசபட்டினம் வெற்றிக்குப் பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைத்தது. தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி, தேவி, எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

வாய்ப்புகள் குறைவு

பின்னர் வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு முதல் ஜார்ஜ் என்பவுடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சனுக்கு ஒரு மகன் உள்ளார். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த எமி ஜாக்சன் தற்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவருடன் வாழ்ந்து வருகிறார். 

கிண்டல்

இந்த நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலானதை அடுத்து, இது எமியா? இல்லை ஜாக்சனா? என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here