இந்தி படம் ஒன்றில் நடிக்க நடிகை திரிஷாவிடன் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனவுக்கன்னி
ஜோடி திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் தலைகாட்டி, அதன்பிறகு “லேசா லேசா” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. ஆனால் அந்த படம் வெளிவதற்கு முன் “மௌனம் பேசியதே” படத்தில் கமிட்டாகி அந்த படம் முதலில் வெளியானது. இதனால் மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன்பிறகு இவரது நடிப்பில் வெளியான அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி ஆகிய படங்கள் அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களாக அமைந்ததால், ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்தார் திரிஷா.
திருப்புமுனை
விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து சினிமா துறையில் முன்னணி நடிகையாக நிலைத்து நிற்கிறார் திரிஷா. சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படமும் திரிஷாவின் சினிமா கெரியருக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது. தற்போது லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. அஜித்குமாரின் விடாமுயற்சி படத்திலும் திரிஷாதான் நாயகி என்கின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 171வது படத்திலும் நாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில், இந்தி படமொன்றில் நடிக்கவும் திரிஷாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், விஷ்ணு வர்த்தன் டைரக்டு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. திரிஷா ஏற்கனவே காட்டா மீட்டா என்ற இந்தி படத்தில் அக்ஷய்குமாருடன் இணைந்து நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.