லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களாலழைக்கப்படும் நடிகை நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், நயன்தாரா தற்போது அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளார். இதில் முதல் பதிவாக தனது குழந்தைகள் உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் ஆகியோருடன் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here