விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது, இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனிலும் அடி எடுத்து வைக்கிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘பிக்பாஸ்’ 7வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பிக்பாஸ் சீசன் 7 விரைவில் வெளியாகும் என கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் டீசர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here