தமிழில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேதாளம்’. சூப்பர் ஹிட் ஆன இப்படம் தெலுங்கில் ‘போலா சங்கர்’ பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் ‘போலா சங்கர்’ படத்தின் இன்டர்வியூ ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, ‘போலா சங்கர்’ படத்தில் பாட்டு இருக்கு.. பைட்டு இருக்கு.. சென்டிமென்ட் இருக்கு என்று சிரிப்பை அடக்க முடியாமல் பேசினார். இதனை கேட்ட நடிகைகள் தமன்னாவும், கீர்த்தி சுரேஷூம் விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இனையத்தில் வைரலாகி வருகிறது.

jeevi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here