அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஷோலே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதாக நடிகர் கமல்ஹாசன் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

சூப்பர் ஹிட் படம்

1975 ஆம் ஆண்டு சிப்பி இயக்கத்தில் வெளியான ‘ஷோலே’ திரைப்படம் தற்போது வரை இந்தியாவின் முக்கியமான பொழுதுபோக்குத் திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அமிதாப் பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், சஞ்சீவ் குமார், ஹேமமாலினி என ஹிந்தி சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்த ‘ஷோலே’ ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. 60 திரையரங்குகளில் பொன்விழா கண்ட இந்தத் திரைப்படம், 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெள்ளிவிழாக் கண்டது.

சுவாரஸ்ய தகவல்

இந்நிலையில் ‘ஷோலே’ படத்தில் தான் உதவி இயக்குநராக பணியாற்றியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த பிராஜக்ட் கே அறிமுக விழாவில் அவர் இதனை கூறியிருக்கிறா. பிராஜக்ட் கே திரைப்படத்தில் கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here