நடிகை அமலா பாலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ”தலைவி ரிடன்ஸ்” எனக் கூறி இணையவாசிகள் டிரோல் செய்து வருகின்றனர்.

மலையாளத்தில் பிஸி

தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை அமலா பால். அதன்பிறகு தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி என்று அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்தார். சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார் அமலா பால். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மீண்டும் பிசி

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதன்பின் மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார். ‘ஆடை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் புகழின் உச்சிக்கே சென்ற அவர், தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாளத் படத்தில் நடித்துள்ளார். திரைக்கு வர தயாராக உள்ள இப்படத்தில், அமலாபால், பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘தலைவி ரிடன்ஸ்’

சமூக வலைத்தளங்களில் அமலா பால் ரொம்பவே ஆக்டிவாக இருப்பார். குறிப்பாக அவரது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கங்களில் நிறைய வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அதனை ரசிகர்களும் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், ‘தலைவி ரிடன்ஸ்’, ‘குயின் வந்து விட்டாள்’ என கமெண்ட் செய்து, ஹார்டிnகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here