சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் தலைப்பிற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இணையத்தில் வைரல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் ஜெயிலராக நடித்திருக்கும் இந்தப் படத்தில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஜெயிலர்’ படத்தில் இடம் பெற்ற காவாலா பாடல், சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைதொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹுக்கும் – தலைவர் அலப்பறை’ என்ற பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அறிவித்து உள்ளனர்.

திடீர் சிக்கல்

இந்த நிலையில் ஜெயிலர் படத்துக்கு திடீர் சிக்கல் ஏற்படுத்தும் விதமாக தலைப்பை மாற்றக்கோரி கேரளாவில் கோரிக்கை எழுந்துள்ளது. அங்கு ஜெயிலர் என்ற பெயரிலேயே புதிய மலையாள படமொன்று தயாராகி உள்ளது. அதில் தியான் ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதைக்கும் ரஜினியின் ஜெயிலர் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்றும், எனவே கேரளாவில் மட்டும் ரஜினியின் ஜெயிலர் பட தலைப்பை மாற்றி வேறு பெயரில் வெளியிடுமாறும் வற்புறுத்தி உள்ளனர். ஆனால் தலைப்பை மாற்ற ஜெயிலர் படக் குழுவினர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here