உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

டெரர் வடிவேலு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். எப்பொழுதும் காமெடியனாகவே பார்த்து பழகிய நடிகர் வடிவேலு, ‘மாமன்னன்’ படத்தில் டெரராக நடித்துள்ளார். இவர்தான் முக்கியமான வில்லனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேதி அறிவிப்பு

‘மாமன்னன்’ படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மாமன்னன்’ படத்தின் டிரெய்லர் ஜூன் 16 ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here