நாக சைதன்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ‘கஸ்டடி’ திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகிறது.

எதிர்பார்க்கும் ஹிட்

தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா (ஏ மாயா சேசவே) திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நாக சைதன்யா. அந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஏழு வருட காதலுக்கு பிறகு சமந்தாவை திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான மூன்றே வருடங்களில் விவாகரத்தும் செய்தார். அதன்பிறகு இருவரின் கெரியரிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

OTT ரிலீஸ்

சமீபத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் திரைப்படம் ‘கஸ்டடி’. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘கஸ்டடி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மாநாடு படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படம், நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், வருகிற ஜூன் 9 ஆம் தேதி அமேசாம் பிரைம் OTT தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here