இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக மைசூரு சென்ற போயபதி ராப்போ படத்தின் கதாநாயகன் ராம் பொதினேனி, நாயகி ஸ்ரீலீலாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இறுதிகட்ட படப்பிடிப்பு
பிளாக் பஸ்டர் இயக்குநரான போயபதி ஸ்ரீனு மற்றும் ராம் பொதினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான போயபதி ராப்போ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று மைசூரில் தொடங்குகிறது. இம்மாதம் 15ம் தேதி வரை நடக்க இருக்கும் படப்பிடிப்பில், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும், ஒரு பாடலும் படமாக்கப்பட உள்ளது.
இணையத்தில் வைரல்
சந்தோஷ் டிடேக் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, எஸ்.எஸ். தமன் இசையமைக்கிறார். அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரங்களுடன் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை தயாரித்துள்ளார். படத்தின் கதாநயகன் ராம் பொதினேனியின் பிறந்தநாளுக்காக வெளியிடப்பட்ட முதல் பார்வையில் அவரை முரட்டுத்தனமான, மாஸ் தோற்றத்துடன் காட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.