நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

வெற்றி கட்டாயம்

நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “என் ரோஜா நீயா” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ஷாகுந்தலம் திரைப்படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், சமந்தாவுக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

வைரல் பதிவு

இந்நிலையில், நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா நெகிச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “உங்களுடைய சிறந்ததையும் பார்த்துள்ளேன், உங்களுடைய மோசமானதையும் பார்த்துள்ளேன். நீங்கள் கடையாக வந்ததையும் பார்த்துள்ளேன், முதலாக வந்ததையும் பார்த்துள்ளேன். உங்களுடைய ஏற்ற, இறக்கங்களை பார்த்து உள்ளேன். சில நண்பர்கள் மட்டுமே அன்புக்காக உடன் இருப்பார்கள்”. எனக் குறிப்பிட்டுள்ளார். நடிகை சமந்தாவின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here