பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

பிஸியான விஷால்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஷால், அதன்பிறகு பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வீரமே வாகை சூடும், லத்தி போன்ற திரைப்படங்கள் வெளியாகின. தற்போது இவரது நடிப்பில் மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இவரது நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, வினய், அணு இமானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மிஷ்கின் இயக்கத்தில் இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

மாஸ் கூட்டணி

மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 படங்களை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான கதகளி படத்தை இயக்கியிருந்தார். கடைசியாக இயக்குநர் பாண்டிராஜ் சூர்யா நடிப்பில் வெளியான “எதற்கும் துணிந்தவன்” படத்தை இயக்கி இருந்தார். தற்போது விஷாலுடன் இணையும் படத்திற்கு பிஸியாக வேலை செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் திருச்சியில் தொடங்க இருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில் இந்த புதுப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை கீர்த்தி செட்டியிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here