மாமன்னன் படத்தின் இசை வெளிவிட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 

டெரர் வடிவேலு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். எப்பொழுதும் காமெடியாகவே பார்த்து பழகிய நடிகர் வடிவேலு, மாமன்னன் படத்தில் டெரராக நடித்துள்ளார். இவர்தான் முக்கியமான வில்லனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பிரம்மாண்ட விழா

மாமன்னன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை (ஜூன் 1ஆம் தேதி) நடக்க உள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நாளை இசை வெளியீட்டு விழா பிரம்மாண்ட நடைபெற இருப்பதால், அதற்கான பணிகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தீவிரமாக நடந்து வருகின்றது. சமீபத்தில் வடிவேலு குரலில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான ராசாக்கண்ணு என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது. அதேபோல் இரண்டாவது பாடலான ஜிகுஜி ரயிலு என்ற பாடல் ஏ.ஆர். ரகுமான் பாடி அசத்திருந்தார். மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில், முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்துள்ளார் மாரி செல்வராஜ். இதனால் மாமன்னன் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here