நடிகை தமன்னாவுடனான காதல் கிசுகிசு தொடர்பாக நிருபர்கள் கேட்ட பதிலளிக்காமல் எஸ்கேப் ஆகியுள்ளார் நடிகர் விஜய் வர்மா.

முன்னணி நடிகை

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. பாலிவுட்டில் பிஸியாகிவிட்டதால் தமிழில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சமீப காலமாகவே தமன்னாவை சுற்றி பல காதல் கிசுகிசுக்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றது.

ரொமான்டிக் வீடியோ

கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் தமன்னா லிப் லாக் முத்தம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியான நாள் முதல் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து எந்த ஒரு மறுப்பையும் இரு தரப்பினரும் கொடுக்கவில்லை. மீண்டும் ஜோடியாக ரொமான்டிக் டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ஜோடியாக தமன்னாவும், விஜய் வர்மாவும் சென்றுள்ளனர். அதன்பிறகு மீண்டும் காரில் ஒன்றாக புறப்பட்டு சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வேகமாக பரவி வருகின்றது. இருவரும் இணைந்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2ஆம் பாகத்தில் நடித்து வருகின்றனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் தான் தற்போது காதலாக மாறியுள்ளது என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றது.

கிரேட் எஸ்கேப்

சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் நடிகர் விஜய் வர்மா. அவரிடத்தில் “ஏதாவது குட் நியூஸ் இருக்கிறதா” என திருமணம் குறித்து சூசகமாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் வர்மா” விரைவில் நல்ல திரைப்படத்தை கொடுக்க முயற்சிக்கிறேன்” என்று கூறிவிட்டு உஷாராக எஸ்கேப் ஆகிவிட்டார். விஜய் வர்மா – தமன்னா காதல் விவகாரம் தீயாய் பரவினாலும், அதுகுறித்து இருவரும் வாய் திறக்காமேலேயே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here