சூப்பர் சிங்கர் புகழ் பாடகி ராஜலக்ஷ்மி நடிப்பில் உருவாகி இருக்கும் லைசென்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிக்க துவங்கிய ராஜலக்ஷ்மி

கிராமப் பாடல்களை பாடி மிகவும் பிரபலமானவர்கள் ராஜலக்ஷ்மி – செந்தில் கணேஷ் தம்பதியினர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கரில் பங்கேற்று டைட்டில் வின்னரான பிறகு இவர்களது திரைப்பயணத்தின் வெற்றி அபாரம் என்று சொல்லலாம். பல திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடி வரும் செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி தம்பதியினர், சமீப காலமாக அடிக்கடி மாடர்ன் போட்டோ ஷூட் நடத்தி அசத்தி வருகின்றனர். சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த சாமி சாமி என்ற பாடல் இவரது குரலில் மிகவும் பிரபலமானது. தற்போது நடிப்பிற்கும் பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ராஜலக்ஷ்மி. அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியாக இருக்கும் லைசென்ஸ் என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஜலக்ஷ்மி. இந்த படத்தில் இவர் ஆசிரியையாக நடித்திருக்கிறார்.

நல்ல வரவேற்பு

ராஜலக்ஷ்மியுடன் இணைந்து அயலி வெப் தொடர் புகழ் அபி நட்சத்திரா, ராதாரவி, தான்யா அனன்யா, விஜய் பாரத், ஜீவானந்தம், அஜய், வையாபுரி உள்ளிட்ட பலரும் அதில் நடித்துள்ளனர். லைசென்ஸ் படத்தை ஜீவானந்தம் தயாரிக்க, கணபதி பாலமுருகன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை சமீபத்தில் வெளியானது. இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். லைசன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான ஒரே நாளில் 74 ஆயிரத்திற்கும் மேலாக பார்வைகளை பெற்று பிரபலமாகியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here