விடுமுறைக்காக இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் நடிகை வாணி போஜன்.

பிஸியான வாணி

ஓர் இரவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வாணி போஜன். ஓ மை கடவுளே படத்தின் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானார். அதன்பிறகு லாக்கப், மலேசியா டு அம்னீசியா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரல் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார் வாணி. வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர், தற்போது பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, தாழ் திறவா, லவ் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். பல படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை வாணி போஜன், விடுமுறைக்காக இந்தோனேசியாவில் உள்ள பாலிதீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கவர்ச்சி புகைப்படங்கள்

இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள வாணி போஜன், அங்கு எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார். மேலும் அவர் தங்கியிருக்கும் ஹில்டன் பாலி ரெசார்ட்டில் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த கடற்கரை விடுதியில் தங்க ஒரு நாள் வாடகை மட்டும் ரூ.17,000 முதல் ரூ.20,000 வரை வசூலிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவருக்கு, பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது வாணி போஜன் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here