சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் இயக்குநர் ஓ.என். ரத்தினம் மனைவி திடீரென தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

காதல் திருமணம்

சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களின் இயக்குநரான ஓ.என். ரத்தினம் மனைவி சென்னையில் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் ரத்தினம் அழகு, வாணி ராணி, செவ்வந்தி, பிரியமான தோழி, பாண்டவர் இல்லம் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களை இயக்கியவர். ரத்தினமும் அவரது மனைவி பிரியாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இருவரும் பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள்.

திடீர் தற்கொலை

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தங்கள் குழந்தைகளை இவர்கள் ஊருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ரத்தினமும் அவருடைய மனைவியும் மட்டும் சென்னையில் வீட்டில் வசித்து வந்தனர். அப்போது இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விடுமுறைக்கு சென்றிருந்த பிள்ளைகள் தாத்தா வீட்டில் இருந்து இன்று அதிகாலையில் தான் சென்னை திரும்பி இருக்கிறார்கள். அப்போது அவர்களை அழைத்து வர ரத்தினம் பேருந்து நிலையத்திற்கு சென்றபோது, பிரியா வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகின்றது. பிரியாவின் தற்கொலைக்கு கருத்து வேறுபாடு தான் காரணமா? இல்லை வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியா தற்போது தற்கொலை செய்துகொண்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here