சன் டிவியில் பிரபலமான ராசிபலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய “விஷால்” சமீபத்திய பேட்டி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.

ராசி பலன் பிரபலம்

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி.ஜே. விஷால். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ராசிபலன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். காலையில் எழுந்தவுடன் இவரது குரலில் ராசி பலனை கேட்டு அதன்பிறகு தனது வேலைகளை தொடங்கும் அளவிற்கு குரலும், ராசி பலனும் இனிமையாக இருக்கும். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் செட்டில் ஆன இவர் சமீப காலமாக மீண்டும் டிவியில் ரீ என்ட்ரி கொடுக்க முயற்சி செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய விஜே விஷால், சமீபத்தில் இதுதொடர்பாக பேட்டியும் கொடுத்துள்ளார்.

சினிமாவில் என்ட்ரி?

விஷால் கொடுத்துள்ள பேட்டியில் அவர் கூறிய இருப்பதாவது; “ராசி பலன் வாசிப்பதால் நான் ஜோசியம் பார்ப்பேன் என்று பல பேர் என்னிடம் வந்து ஜோசியம் கேட்டு உள்ளார்கள். எனக்கு வாசிக்க மட்டும் தான் தெரியும் ஜோசியம் எல்லாம் தெரியாது என்று நான் கூறியுள்ளேன். இந்த நிகழ்ச்சியின் தமிழ் உச்சரிப்புக்காக மட்டுமே கிட்டதட்ட ஆறு மாதம் வரை நான் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஜோதிடம், ஜாதகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் ஜோதிடர்கள் மீது நான் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வைக்க மாட்டேன். முதன் முதலில் நான் திரைவிமர்சனம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அதன்பிறகு எனது தமிழ் உச்சரிப்பை பார்த்து ராசி பலன் வாசிக்க வாய்ப்பு கிடைத்தது” என்று கூறியுள்ளார். இவர் சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் ரீஎன்ட்ரி கொடுக்க தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here