நான் உயிரோடு இருக்க நீங்கள் தான் காரணம் என்று ரசிகர்களுக்கு உருக்கமாக பதிவு வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை சம்யுக்தா.

காதல்-பிரிவு

சீரியலில் ஜோடியாக நடித்து பிறகு காதலித்து திருமணம் செய்துகொள்வது சாதாரண விஷயமாகவே மாறி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி தான் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா. இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான சிற்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்த போது காதலித்து வந்தனர். அதன்பிறகு கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு திருமணமும் நடந்தது. திருமணமான இரண்டு மாதங்களிலேயே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த திருமண புகைப்படங்கள் அனைத்தையும் இருவரும் நீக்கினார்கள். இந்த சம்பவத்தால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இருவரும் பிரிந்துவிட்டதாகவும் நெட்டிசன்ஸ் மத்தியில் பல செய்திகள் பகிரப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம் லைவில் தாங்கள் பிரிந்துவிட்டதாக இருவரும் அறிவித்திருந்தனர்.

சந்தையான சோசியல் மீடியா

இருவரும் பிரிந்த பிறகு, சமூக வலைதளங்களில் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்களும் அதிகம் பகிரப்பட்டு வந்தது. இதனிடையே நடிகை சம்யுக்தா வெளியிட்டுள்ள பதிவில்; “இதற்கு முன்னால் நான் நடித்த கதாபாத்திரங்களுக்காக என் மீது அன்பு செலுத்தினீர்கள். ஆனால் இன்று தனிப்பட்ட முறையில் என் மீது அன்பு காட்டுகிறீர்கள். என்னை உங்கள் சகோதரியாக நடத்துகிறீர்கள். நான் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். நான் உயிரோடு இருப்பதற்கு தகுதி உள்ளவள் என்று நினைப்பதற்கு நீங்களே காரணம். என்னை அப்படியே ஏற்றுக்கொண்டதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்ஸ் கருத்து

திருமணமான பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு வருவது சாதாரண விஷயம். சேர்ந்து வாழ்வதும், பிரிவதும் அவரவர்களின் தனிப்பட்ட முடிவு. அதனை சோசியல் மீடியாக்களில் கொண்டு வந்து ஒருவரை ஒருவர் குறை கூறுவது சரி இல்லை என்று இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here