கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று நடிகை ஸ்ருதிஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இணையான சம்பளம்

கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டும் என்று கதாநாயகிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா அளித்த பேட்டியில், ஹீரோவுக்கு இணையாக தனக்கு சம்பளம் கிடைத்துள்ளது என்றும் இந்த உயரத்துக்கு வர 20 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

பெருமையா இருக்கு

இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசனிடம் கேட்டபோது, “பிரியங்கா சோப்ரா ஹீரோவுக்கு இணையான சம்பளம் பெற்றதன் மூலம் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறார். ஹாலிவுட் ஹீரோவுக்கு சமமான சம்பளத்தை அவர் வாங்கியதாக தெரிவித்து இருப்பது பெருமையாக உள்ளது. நாங்கள் எல்லாம் இன்னும் உழைத்துக்கொண்டு இருக்கிறோம். நமது சினிமா துறையில் சமமான சம்பளம் குறித்து எந்த பேச்சும் எழுவது இல்லை. ஹீரோக்களுக்கு சமமான சம்பளம் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் நாள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here