‘ஜப்பான்’ படத்தின் டீசர் அருமையாக இருப்பதாகவும் முற்றிலும் வித்தியாசமான முயற்சி என்றும் நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

பிறந்தநாள் பரிசு

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய கார்த்தி இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் கார்த்தியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்து வெளிவரப்போகும் ஜப்பான் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 4 மொழிகளில் உருவாகியுள்ள ஜப்பான் ப்ரோமோ வீடியோவை தமிழில் சிம்புவும், மலையாளத்தில் துல்கர் சல்மானும் வெளியிட்டுள்ளனர். மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி ஆகியோரும் வெளியிட்டு கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

தீபாவளி ரிலீஸ்

கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகியுள்ளது இந்த டீசரை பார்க்கும் பொழுது தெரிகிறது. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை, ராஜூ முருகன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகை அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜப்பான் திரைப்படம் தீபாவளி ரிலீசை கன்பார்ம் செய்துள்ளனர் படக்குழுவினர். ஜப்பான் படம் மட்டுமின்றி சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ஜிகர்தண்டா திரைப்படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகப்போவதாக கூறியுள்ளனர். அது மட்டுமில்லாமல் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல படங்கள் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆவதால், ஜப்பான் திரைப்படத்திற்கு மிகுந்த ஆவல் நிலவி வருகின்றது.

பாராட்டு

இந்நிலையில், ஜப்பான் படத்தின் டீசரை பார்த்த நடிகர் சூர்யா படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “‘ஜப்பான்’ மேட் இன் இந்தியா.. டீசர் அருமையாக உள்ளது.. முற்றிலும் வித்தியாசமான முயற்சி தம்பி.. படக்குழுவிற்கு வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here