தன்னுடன் பயணித்த சக ரைடரான சுகத் என்பவருக்கு 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை பரிசாக கொடுத்துள்ளார் நடிகர் அஜித்குமார்.
விடாமுயற்சி
அஜித்தின் 62வது படத்தை இருக்க உள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு சமீபத்தில் விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசை அமைக்கிறார். இந்நிலையில் நேபால், பூட்டான் உள்ளிட்ட நாடுகளுக்கு பைக் ரைடு சென்றார் அஜித் குமார். இதன் சம்பந்தப்பட்ட வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி ட்ரெண்டானது. அஜித்தின் முதல் கட்ட சுற்றுப்பயணம் கடந்த எட்டாம் தேதி முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் அறிவித்துள்ளனர்.
பைக் பரிசு
வேர்ல்ட் டூருக்கு நடுவே விடாமுயற்சியின் சூட்டிங் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் அஜித் சூட்டிங்கில் கலந்துகொண்டு தனது போர்ஷனை மட்டும் விரைவாக முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அஜித்துக்கு பைக் மேல் உள்ள மோகத்தை அவர் ஆரம்பித்த ஏகே மோட்டோ ரைட் என்ற மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனம் உணர்த்தியது. இந்நிலையில் தன்னுடைய சக ரைடர் சுகத் என்பவருக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான BMW F 850 GS பைக்கை பரிசாக கொடுத்திருக்கிறார். இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. சுகத் தான் அஜித் சிக்கிமில் செய்த பைக் ரைடை ஏற்பாடு செய்து கொடுத்தார் எனவும் கூறப்படுகின்றது.