விடுதலை படத்தில் நடித்த நடிகை பவானி ஸ்ரீ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.

நல்ல வரவேற்பு

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “விடுதலை பார்ட் 1” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவரை காமெடியனாக கலக்கி வைத்த நடிகர் சூரி இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக “தமிழரசி” என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கையாவார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப் போக இவரது மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது.

அசத்தல் போட்டோஸ்

விடுதலை பார்ட் 1 படத்தை தொடர்ந்து விடுதலைப் பார்ட் 2 படத்திலும் நடித்து வருகிறார் பவானி ஸ்ரீ. அது மட்டும் இல்லாமல், “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்ற கதைகளையும் கேட்டு வருகிறார். பிஸியாக இருந்து வரும் நடிகை பவானி ஸ்ரீ அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. விடுதலை படத்தில் நடித்த நடிகையா இவர்? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு இவரது அழகில் ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர். இதுபோல் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வந்தால் தமிழில் இவர் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here