சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல் பாகம் ஹிட்

2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா போன்ற பலரும் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சந்திரமுகி. நடிகர் வடிவேலுவின் காமெடி இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. சந்திரமுகி படத்தை எழுதி, இயக்கியவர் பி. வாசு. வித்யாசாகர் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இறுதிகட்ட ஷூட்டிங்

சந்திரமுகி படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்தில் இருந்த பி வாசு சமீபத்தில் அதன் படப்பிடிப்பை தொடங்கினார். சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்தார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. இந்த நிலையில் நாளை முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பட படிப்பு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இப்படத்தை பற்றி கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here