பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து பிரபலமான நடிகை விஜயலட்சுஷ்மி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சீரியல் பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி மற்றும் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்தவர் நடிகை விஜயலட்சுமி. கண்ணம்மாவின் பாட்டியாக நடிகை விஜயலட்சுமி பிரபலமடைந்தார். ஆரம்பத்தில் கண்ணம்மாவை கொடுமைப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜயலட்சுமி, பிறகு அந்த தொடரை விட்டு விலகினார்.

திடீர் மரணம்

70 வயதாகும் விஜயலட்சுமிக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டு நேற்று காலை தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. நடிகை விஜயலட்சுமியின் மரணம் சின்னத்திரையில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த அவர், சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகவும், அதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து சோர்வாக இருந்த விஜயலக்ஷ்மி தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அன்பாக பழகக்கூடியவர்

சின்னத்திரை பிரபலங்கள் நேரில் சென்று விஜயலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் விஜி எப்போதும் சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் என பிரபலங்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக ஒரு பேட்டியில், தனக்கு சாகும் வரை நடிக்க வேண்டும் என்பது ஆசை என விஜயலட்சுமி தெரிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here