ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “2018” திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

சூப்பர் ஹிட்

இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திடைப்படம் “2018”. இப்படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சாகா போபன், ஆசிஃப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுருளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை, காவியா ஃபிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் ப்ரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு கேரளா சந்தித்த பெரும் வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு ‘2018’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வசூல் வேட்டை

கேரளாவில் இந்த திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. மலையாள சினிமாவில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த திரைப்படம் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. இதற்கு முன் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த “லூசிபர்” திரைப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மோகன்லால் படத்தின் சாதனையை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது.

முன்னணி இயக்குநர்

“2018” திரைப்படத்தை தொடர்ந்து நிவின் பாலி நடிக்கப் போகும் புது படத்தை இயக்க உள்ளார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் ஏற்கனவே நிவின் பாலியுடன் இணைந்து “ஓம் சாந்தி ஒஷானா” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here