குஷி படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சிறிய வீடியோக்களை இணைத்து ரொமான்டிக் வீடியோவாக வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

வெற்றி கட்டாயம்

நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “என் ரோஜா நீயா” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ஷாகுந்தலம் திரைப்படம் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை சிவா நாராயணா எழுதி, இயக்குகிறார். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த திரைப்படம், சமந்தாவுக்கு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

வைரல் வீடியோ

குஷி திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நா ரோஜா நுவ்வே’ என்ற ஃபஸ்ட் சிங்கிள், விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் பரிசாக வெளியிட்டு இருந்தனர். இதே பாடல் தமிழில் ‘என் ரோஜா நீயா’ என்று தொடங்குகிறது. இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துள்ளது. இப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது சமந்தாவிற்கே தெரியாமல் குறும்புத்தனமாக எடுக்கப்பட்ட சிறுசிறு காட்சிகளை வீடியோவாக இணைத்து விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here