திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான கஸ்டடி திரைப்படம் கலவையான விமர்சனைகளை பெற்று வருகிறது.

எதிர்பார்க்கும் ஹிட்

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கஸ்டடி. தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா (ஏ மாயா சேசவே) திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நாக சைதன்யா. அந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஏழு வருட காதலுக்கு பிறகு சமந்தாவை திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யா, கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான மூன்றே வருடங்களில் விவாகரத்தும் செய்தார். அதன்பிறகு இருவரின் கெரியரிலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஹிட் படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆப்பு வைத்த வெங்கட் பிரபு

நாகை சைதன்யா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் கஸ்டடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மாநாடு படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய இந்த திரைப்படம், நீண்ட நாட்களாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. தெலுங்கு மற்றும் தமிழில் பையிலிங்குவல் திரைப்படமாக வெளியான கஸ்டடி திரைப்படம், முதல் அரை மணி நேரம் மிகவும் ஸ்லோவாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஸ்லோவா ஆரம்பித்தாலும் கதை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.

எடுபடாத காதல் காட்சி

இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களின் காதல் காட்சிகளும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எடுபடவில்லை என்று ரசிகர்கள் கருத்து கூறி உள்ளனர். சரத்குமார் மற்றும் அரவிந்த் சாமியின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும், அதேபோல் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் பாடல்கள் தான் படத்தை தூக்கி நிறுத்துகிறது என்றும் கருத்துக்கள் வெளியாகியுள்ளது. இந்த வீக் எண்டில் இப்படம் எவ்வளவு கலெக்ஷன் செய்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here