கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் SK21 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது.

அடுத்தடுத்து படங்கள்

டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த டான், பிரின்ஸ் திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களுக்கு பெற்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன், அயலான் உள்ளிட்ட படங்கள் வெளிவர தயாராக உள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் மாவீரன் திரைப்படத்தின் தேதி மாற்றப்படும் என்றும் கூறுகின்றனர். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருப்பதால், சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ரிலீஸ் தேதி தாமதமாகும் என்று கூறுகின்றனர். அதேசமயம் அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

சிவா – சாய் பல்லவி காம்போ

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் SK21 திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். SK21 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராஜ்குமார் பெரியசாமி, ஜி.வி. பிரகாஷ், தயாரிப்பாளர்கள் மகேந்திரன், அன்புச்செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் இந்த பூஜையில் பங்கேற்றார்.

துவங்கிய ஷூட்டிங்

இன்று நடந்த SK 21 பூஜையில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கமல்ஹாசன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். மேலும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆக்சன் என்றதும், SK21 படப்பிடிப்பு தொடங்கியது. இதனை அடுத்து சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் எழுதுவது போல முதல் காட்சி படமாகப்பட்டது. இதில் இறுதியாக அன்பே சிவம் என கமல்ஹாசன் படத்தின் டைட்டில் முடிவதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here