மெட் காலா பேஷன் ஷோவில் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸ் மதிப்பை கேட்ட ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.

ஹாலிவுட்டில் செட்டில்

பாலிவுட்டில் இருந்து விலகிய நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது இவர் நடிப்பில் வெளியான சிட்டாடல் வெப் தொடர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் பிரிமியர் ஷோ லண்டனில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த வெப் தொடரின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை சமந்தா நடித்து வருகிறார்.

மாடலிங் ஆர்வம்

மாடலிங் மீது உள்ள ஆர்வத்தால் அடிக்கடி பேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார் பிரியங்கா சோப்ரா. அந்த வகையில் சமீபத்தில் புகழ்பெற்ற “மெட் காலா பேஷன் ஷோ” நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் பிரியங்கா சோப்ரா தனது கணவரான நிக் ஜோனஸ்சுடன் கலந்துகொண்டார்.

விலையுயர்ந்த நெக்லஸ்

ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா மூன்றாவது முறையாக கலந்து கொள்கிறார். இந்த முறை நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த உடையும், ஆபரணங்களும் காண்போரை வெகுவாக கவர்ந்தது. பிரியங்கா சோப்ரா மெட் காலா நிகழ்ச்சிக்கு அணிந்து வந்திருந்த அழகிய வாலண்டினோ ஆடை மற்றும் புகழ்பெற்ற பல்கேரி நிறுவனத்தின் 11.6 காரட் வைர நெக்லஸ் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற்றுள்ளன. ப்ளூ லகுனா வைரம் பதிக்கப்பட்ட அந்த நெக்லஸ் சுமார் ரூ.204 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here