பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது நடிகர் விக்ரமும், நடிகை ஐஸ்வர்யா ராயும் ஜாலியாக விளையாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சரியான தேர்வு

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து படமாக உருவாக்க பல முன்னணி இயக்குநர்கள் முயற்சித்தும் முடியாத நிலையில், இதனை சாத்தியமாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். புத்தகத்தில் மட்டுமே படித்து வந்த கதாபாத்திரங்கள் நேரில் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அத்தனை கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கும் விதமாக ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தரச் சோழர், பூங்குழலி, வானதி, அனிருத்த பிரம்மராயர், ஆழ்வார்க்கடியான் நம்பி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், வீரபாண்டியன், ரவி தாசன், ஊமை ராணி என அணைத்து கதாபாத்திரங்களின் நடிகர்களையும் கச்சிதமாக தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

பிரம்மாண்டத்தின் உச்சம்

விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் தனது பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர். பின்னணி இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், தோட்டா தரணியின் பிரம்மாண்ட செட்டுகள், இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகள் என அனைத்தும் இப்படத்திற்கு பிரம்மாண்டத்தை சேர்த்துள்ளது. சீயான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் டபுள் ரோல் நடிப்பு இரண்டாம் பாகத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. நேற்று வெளியான பொன்னியின் செல்வன் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டிரெண்டாகும் வீடியோ

இந்நிலையில், நடிகர் விக்ரமின் பதிவு சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. அதாவது, ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் புரோமோஷனின் போது ஐஸ்வர்யா ராயுடன் ஜாலியாக விளையாடிய வீடியோவை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here