இளம்பெண் ஒருவர் மேக்-அப் செய்து அச்சு அசலாக கிரிக்கெட் வீரர் தோனி போலவே மாறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அச்சு அசல்
கிரிக்கெட் வீரர் தோனிக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். தோனி விளையாடும் போது ரசிகைகள் கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ‘மேக்-அப்’ கலைஞரான தீக்ஷிதா ஜிந்தா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் தோனியை போல் மேக்கப் செய்து அச்சு அசலாக தோனி போலவே மாறிய காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோஸ்
‘மேக்-அப்’ கலைஞரான தீக்ஷிதா ஜிந்தா, ஏற்கனவே நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் கபில்தேவ், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பிரபலங்களை போல் அச்சு அசலாக மேக் அப் செய்துள்ளார். இவரது இந்த மேக் அப் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.