இயக்குநர் மணிரத்னம் இயக்கப் போகும் கமல்ஹாசனின் 234வது படத்தில் நாயகியாக நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாலிவுட் நடிகை

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் தற்போது கமல்ஹாசன் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்க உள்ளார். இது கமல்ஹாசனின் 234 படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளிடம் படக்குழுவினர் அனுகியதாகவும், ஆனால் அவர்கள் சில காரணங்களினால் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தமிழ் நடிகைகளை எல்லாம் விட்டுவிட்டு, பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

பலமான கூட்டணி

கமல்ஹாசன் ஜோடியாக நடிகை வித்யா பாலன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான குரு திரைப்படத்தில் வித்யா பாலன் நடித்திருந்தார். மணிரத்னம் கமலஹாசன் கூட்டணியில் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் இருவருக்குமே வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கமல்ஹாசன் பெற்றார். 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் “கமல் 234” திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இந்த பலமான கூட்டணியில் நடிகை வித்யா பாலன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here